கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு || அதிமுக முன்னாள் எம்எல்ஏ., ஆறுக்குட்டி பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


கடந்த 2017 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி சம்பவம் அரங்கேறியது. இதில் அந்த எஸ்டேட்டின்  காவலாளி கொலை செய்யப்பட்டார். 

இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீசார் சயான், வாளையாறு மனோஜ் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிர் இழக்கவே, இந்த வழக்கு விசாரணை வேறுவிதமாக மாறியது.

மேலும், தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இந்த கோடநாடு கொலை, கொள்ளை சம்பவ வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது. உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரின் உறவினர் ரமேஷ் ஆகியோர் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.

மேலும் இந்த வழக்கில் எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலாவின் உறவினர்& தனியார் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான விவேக் ஜெயராமன் ஆகியோர் இடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், கடந்த ஜனவரி மாதம் தீபு, சதீசன்,ஜம்சீர் அலி, பிஜின், ஜிஜின் ராய் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக கோவை அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி இடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுமார் 6 மணி நேரம் இவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணை குறித்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி தெரிவிக்கையில், "இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் ஒரு வருடத்துக்கும் மேலாக என்னிடம் ஓட்டுனராக பணியாற்றியுள்ளார். அதனால் அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு என்று போலீசார் விசாரணை செய்தனர்.

நான் எனக்கு தெரிந்த விவரங்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளேன். போலீசாரின் இந்த விசாரணை நேர்மையாக நடந்து கொண்டிருக்கிறது. எப்போது போலீசார் என்னை அழைத்தாலும் நான் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன்" என்று ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kodanadu murder case ex mla aarukutty equerry


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->