ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : 'என் கணவர் செய்தது தவறு தான்.. ஆனால் ...' வழக்கறிஞர் அருள் மனைவி கதறல்..!! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே சில மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து இந்த கொலை வழக்கில் இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

அவர்களில் முக்கிய குற்றவாளிகளான பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் காவலில் எடுத்து தனித் தனியாக விசாரணை நடத்தி வந்தனர். 

இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கை முதலில்  வெட்டிய  முக்கிய குற்றவாளியான குன்றத்தூர் திருவேங்கடத்தை ஆம்ஸ்ட்ராங்கை கொல்லப் பயன்படுத்தி விட்டு, பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைப்பதற்காக போலீஸ் வாகனத்தில் அவரை அழைத்துச் சென்றபோது, அவர் தப்பியோட முயன்றதால், போலீசார் அவரை என்கவுன்ட்டர் செய்தனர். 

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் முக்கிய குற்றவாளியாக உள்ள வழக்கறிஞர் அருளை போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வழக்கறிஞர் அருளின் மனைவி ஆவடி காவல் ஆணையரிடம் ஒரு மனு அளித்துள்ளார். 

அதில் அவர், "எனது கணவர் தவறு செய்துள்ளார். எனவே அதற்குரிய தண்டனையை சட்டம் அவருக்கு வழங்கட்டும். ஆனால் என் கணவரை போலீஸ் கஸ்டடியில் எடுக்க அனுமதிக்க கூடாது. திருவேங்கடத்தை என்கவுன்ட்டர் செய்தது போல் என் கணவரையும் போலீசார் என்கவுன்ட்டர் செய்து விடுவார்கள். அவர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எனவே போலீஸ் கஸ்டடியில் அவரை அனுப்பக் கூடாது" என்று மனுவில் வழக்கறிஞர் அருளின் மனைவி அபிராமி குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lawyer Arul Wife Screams Out For Her Husband in Armstrong Murder Case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->