முதலமைச்சராகும் கனவை விட்டு விடுங்கள் சீமான்!...வெளுத்து வாங்கிய நடிகை விஜயலட்சுமி!
Leave the dream of becoming chief minister seeman bleached actress vijayalakshmi
நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டு, நாதக தலைவர் சீமானை சாடியுள்ளார். அதில்
வந்தாச்சு மீண்டும் மிஸ்டர் சீமான் என்றும், ரொம்ப உத்தமர் மாதிரி தமிழ் தேசியம் பற்றி கதைகளைப் பேசிவிட்டு, நான் ரொம்ப நல்ல தமிழ் அப்பா அம்மாவுக்கு பிறந்தவன் என்று கூறி இருக்கிறார் சீமான் என்று கூறியுள்ளார்.
மேலும், அடுத்து என்னை முதல்-அமைச்சர் ஆக்குங்க என்று சொன்னீங்களே, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரே ஒரு விஷயத்தில் கிளாரிட்டி கொடுங்க. பின்னர் உங்களை முதலமைச்சர் ஆக்கலாமா வேண்டாமா என்று அவர்கள் முடிவு செய்வார்கள்.
போன வருடம் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை என் வங்கிக் கணக்கில் ரூ. 50,000 போட்டுவிட்டு, இது கயல்விழிக்கு தெரியக்கூடாது, தமிழ்நாட்டு மக்கள் யாருக்கும் தெரியக்கூடாது என என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டு, இரவும் பகலுமாக என்னிடம் வீடியோ வாங்க டார்ச்சர் செய்தீர்களே.
அவ்வளவுதானா உங்க யோக்கியதை? வெறும் 5000 ரூபாய்க்கு உங்களிடம் வீட்டு வேலைக்கு வந்த மதுரை செல்வம் எனக்கு ரூ. 1 கோடி கொடுத்திருக்கிறாராம். அதை என்னவென்று கேட்காமல்.. ஏதோ வாபஸ் கொடுத்துவிட்டு போய்விட்டா என்று நினைத்து, உங்க மனைவி முன் நின்று, 'பழக்கத்திற்கு இவள் தான் கிடைத்தாளா என எனது மனைவி கேட்டாள்' என்று சிரிப்பது தானா உங்கள் யோக்கியதை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையெல்லாம் பார்த்த பிறகு தமிழ்நாட்டு மக்கள் உங்களை முதல்-அமைச்சர் ஆக்கப்போகிறார்களா? உங்களுக்கு உண்மை பேசும் யோக்கியதையே கிடையாது. உங்களைப் போன்ற துரோகிகள் கையில் தமிழ்நாடு எப்போதும் சிக்காது. அப்படி சிக்கிறதுக்கு தமிழ் உணர்வாளர்கள் யாரும் யாரும் விடவும் மாட்டார்கள். ஓகேவா, எனவே, உங்கள் முதலமைச்சர் கனவை இத்தோடு விட்டுவிடுங்கள். என் கண்ணீர் உங்களை சும்மா விடாது.. அதைபோல என்னோட அக்கா கண்ணீர் உங்களை என்னைக்கும் சும்மா விடாது என்று பேசியுள்ளார்.
English Summary
Leave the dream of becoming chief minister seeman bleached actress vijayalakshmi