கோபிசெட்டிபாளையத்தில் பரபரப்பு..தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த மக்கள்.!!
Lok Sabha election no contest Gobichettipalayam
நாடுமுழுவதும் நாளை மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்கு பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் பள்ளிகள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்ற நிலையில், கோபிசெட்டிபாளையம் அருகே தாசப்பன் கவுண்டன் புதூர் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே வேங்கை வயல் மக்கள் தீத்துறை புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில், தாசப்பன் கவுண்டன் புதூர் மக்களும் அறிவுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக மயானம், சாலை, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தாசப்பன் கவுண்டன் புதூர் கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும், கதவுகளில் தேர்தலை புறக்கணிப்பதாக சுவரொட்டி ஒட்டியும் அவர்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Lok Sabha election no contest Gobichettipalayam