லாட்டரி மோசடி : விசிக நிர்வாகி இல்லத்தில் இன்று 2-வது நாளாக சோதனை!
Lottery scam today is the 2nd day of inspection at vck administrator house
கோவையை சேர்ந்த தொழில் அதிபர் மார்ட்டின் லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்து ரூ.910 கோடியை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. அமலாக்கத்துறை இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே நேற்று மார்ட்டின் வீடு மற்றும் அவரது மருமகனும், விசிகவின் துணைப் பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அந்த வகையில், அவருடைய வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாகத் துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைகள் முழுமை அடைந்த பிறகே, என்னென்ன ஆவணங்கள் சிக்கின என்ற உள்ளிட்டவை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மார்ட்டினின் ரூ.450 கோடி அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இதே போல், ஆதவ் அர்ஜுனா வீட்டில் கடந்த 2019ஆம் ஆண்டில் இரண்டு முறை வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
Lottery scam today is the 2nd day of inspection at vck administrator house