இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் முதல் ஊரடங்கு அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியானது.!  - Seithipunal
Seithipunal


உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பாதிப்பு, தற்போது உலகம் முழுவதும் அதிகரித்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இதில், இந்தியாவைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 236 பேர் ஒமைக்ரேன் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இரண்டாவதாக தலைநகர் டெல்லியில் 64 பேர் ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஒமைக்ரான் குறித்து மத்திய அரசு எச்சரித்துள்ளது. அறிவியல் ஆதாரத்தின்படி டெல்டா வகையைக் காட்டிலும் ஒமைக்ரான் வகை மூன்று மடங்கு அதிகம் பரவக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தலைநகர் டெல்லியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஹரியாணா மாநிலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் வங்கி, வணிக வளாகம், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு வர தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இன்று மாலை, ஒமைக்ரான் பரவல் குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்துக்குப்பின் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் இரவு 11 முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக, அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

இதுவரை மத்தியப் பிரதேசத்தில் ஒரு ஒமைக்ரான் தொற்று கூட கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் முதல் ஊரடங்கு அறிவிப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madhya pradesh night time lockdown omicron


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->