அதிமுக எழுச்சி மாநாடு.. கொடியேற்றி தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி.! - Seithipunal
Seithipunal


மதுரையில் நடைபெறும் அதிமுக எழுச்சி மாநாட்டை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு மதுரை வளையங்குளத்தில் இன்று நடைபெறுகிறது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால் கவனம் பெற்றுள்ளது.

அதன்படி மதுரை வலையங்குளம் பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட திடல் அமைக்கப்பட்டு, லட்சக்கணக்கான தொண்டர்கள் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாநாட்டில் 15 லட்சம் அதிமுக தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டையொட்டி அதிமுக தொண்டர்கள் நேற்று முதலே மதுரையில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனையடுத்து மாநாட்டிற்கு புறப்படுவதற்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு 5.5 அடி உயர வெள்ளி வேலை சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கந்தன் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர்.

அதிமுக மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து மாநாட்டு திடலுக்கு நூற்றுக்கணக்கான வாகன அணிவகுப்புடன் புறப்பட்டார். திடலை வந்தடைந்த எடப்பாடி பழனிச்சாமி முதல் நிகழ்வாக 51 அடி உயரம் கொண்ட கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்று மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து பூக்கள் தூவப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai ADMK convention starts


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->