குடும்ப அரசியலை குனிய வைத்து குத்திய மஹாராஷ்ட்ரா மக்கள்! மரண மாஸ் காட்டிய ஏக்நாத் ஷிண்டே!
Maharashtra Assembly Elections 2024 shiv sena
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் முன்னிலை மற்றும் முடிவுகள் காலை முதல் வெளியாகி கொண்டு இருக்கின்றன.
இதில், என்டிஏ மற்றும் ஐஎன்டிஐஏ இடையே வலுவான போட்டி இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அதெற்க்கெல்லாம் வாய்ப்பே இல்லை. எங்களுக்கு என்டிஏ கூட்டணி ஆட்சியே போதும் என்று ஐஎன்டிஐஏ கூட்டணியை புறக்கணித்து உள்ளனர் மகாராஷ்டிரா மக்கள்.
தற்போதுவரை மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி (என்டிஏ) 218 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. ஐஎன்டிஐஏ (காங்கிரஸ்) கூட்டணி 58 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
பெரும்பான்மைக்கு 144 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
இந்த தேர்தலில் சிவசேனாவின் குடும்ப வாரிசு அரசியலுக்கும் மக்கள் முடிவு கொடுத்துள்ளனர். உத்தவ் தாக்ரேவின் (காங்கிரஸ் கூட்டணி) குடும்ப வாரிசு அரசியலை எதிர்த்து பிரிந்துவந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு (பாஜக கூட்டணி) இந்த தேர்தலில் மக்கள் பெரும் ஆதரவை கொடுத்துள்ளனர்.
78 தொகுதிகளில் போட்டியிட்ட ஏக்நாத் ஷிண்டே 56 இடங்களில் முன்னிலை பெற்று உள்ளது. அதே சமயத்தில் உத்தவ் தாக்ரே 92 இடங்களில் போட்டியிட்டு வெறும் 18 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது.
இதன் மூலம் உத்தவ் தாக்ரேவின் வாரிசு அரசியலை மக்கள் புறக்கணித்து உள்ளதாகவும், இனி உண்மையான சிவசேனா என்றால் அது ஏக்நாத் ஷிண்டே தான் என்ற நிலை உருவாகியுள்ளது.
English Summary
Maharashtra Assembly Elections 2024 shiv sena