நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய பதிவு - நூபுர் சர்மாவுக்கு மகாராஷ்டிர மாநில காவல்துறை சம்மன்.!  - Seithipunal
Seithipunal


இஸ்லாமிய மதம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததற்காக, பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நூபுர் சர்மா, வருகின்ற 22 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று, மகாராஷ்டிர மாநில காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

பாஜகவின் டெல்லி ஊடக பிரிவு தலைவர் நவீன்குமார் டிவிட்டர் பக்கத்திலும், பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா தொலைக்காட்சி விவாத மேடையிலும், நபிகள் நாயகத்துக்கு எதிராக சில சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதன் காரணமாக அவர்கள் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டனர். இவர்களின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு ஐக்கிய அரபு அமீரக நாடுகள் ஓமன், பஹ்ரைன் உள்ளிட்ட 15 நாடுகள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இதற்கு மத்திய அரசும் விளக்கம் அளித்துள்ளது.

நவீன் குமாா் ஜிண்டால், நூபுர் சர்மா ஆகிய இருவர் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில், மகாராஷ்டிரா மாநில காவல்துறையினர் இன்று சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

காவல்துறையினர் அனுப்பியுள்ள அந்த சம்மனில், வருகின்ற ஜூன் 22ஆம் தேதி நேரில் ஆஜராகி, மதரீதியாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்தற்கான விளக்கத்தை வாக்குமூலமாக அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra State Police summons Nupur Sharma


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->