படுதோல்வியை நோக்கி பாஜக | அதிர்ச்சி கொடுத்த உ.பி., இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலம், மெயின் புரி மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

பாஜக வேட்பாளர் ரகுராஜ் சிங்கை விட, சமாஜ்வாதி கட்சி வேட்பாளரும், அகிலேஷ் யாதவியின் மனைவியுமான டிம்பில் யாதவ் 54,797 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

பொதுவாக ஒரு மாநிலத்தில் இடைத்தேர்தல் என்றால், அந்த மாநிலத்தை ஆளக்கூடிய ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும், குறிப்பாக தமிழகத்தில் திருமங்கலம் ஃபார்முலா என்ற ஒரு புதிய பார்முலாவே உருவாகி, இன்று வரை இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சியே வெற்றி பெறுவது வழக்கமாகி வருகிறது.

அப்படி இருக்க உத்திரபிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக இடை தேர்தலில் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 


மேலும் தேர்தல் செய்திகள் : குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி முகம். காந்தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

68 தொகுதிகளை கொண்ட ஹிமாச்சல பிரதேசத்தில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், காங்கிரஸ் - 37 (பெரும்பான்மைக்கு 35 இடங்கள்) இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக - 30, ஆம் ஆத்மி - 0, மற்றவை - 4 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

#HimachalPradeshElections | #HimachalElection2022 | #ElectionwithThanthiTv | #BJP | #Congress


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mainpuri Lok Sabha by polls SP candidate Dimple Yadav leads


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->