சூடு பிடிக்கும் அரசியல் களம்: தமிழகம், புதுச்சேரியில் காா்கே பிரசாரம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலில் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் வருகின்ற 17ஆம் தேதி உடன் நிறைவடையுள்ளது.

பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளதால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழக மற்றும் புதுச்சேரியில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

இன்று காலை புதுச்சேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மல்லிகார்ஜுன கார்கே பேச உள்ளார். மேலும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆதரித்து திருநெல்வேலியில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். 

விழுப்புரத்தில் வி.சி.க சார்பில் போட்டியிடும் ரவிக்குமாரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். தமிழக மற்றும் புதுச்சேரியில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mallikarjuna Karke campaign


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->