இனி தமிழக அரசு பேருந்துகள் அந்த இடத்தில் மட்டும் நிற்கவே நிற்காது.! அதிரடியாக தடை உத்தரவை பிறப்பித்த அமைச்சர்.!
mamandoor bus motal stop issue
சென்னை அருகே மாமண்டூர் உணவகங்களில் தமிழக அரசு பேருந்துகள் நிற்பதற்கு தடை விதித்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்று காலை முதல் சென்னை அருகே மாமண்டூர் உணவகங்களில் தமிழக அரசு பேருந்துகள் விற்பதற்கு தடை விதித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து வெளியான அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, "செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூர் பயண வழி உணவகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுகிறது.
மக்களிடமிருந்து பெறப்பட்ட புகாரின்பேரில், தரமற்ற உணவு வழங்கி வழங்கிய உணவகங்கள் செயல்பட்டு வருவதால், தமிழக அரசு பேருந்துகள் அங்கு நின்று செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய தரமான உணவகத்திற்கு அனுமதி வழங்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உணவின் தரம் குறைவாக இருந்ததாகவும், விலைகள் அதிகமாக இருப்பதாகவும் பல்வேறு பயணிகளிடம் இருந்தும், பொதுமக்களிடமிருந்தும் புகார்கள் வந்து உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு முறை இது குறித்து அறிக்கை தந்தும், இந்த மாமண்டூரில் செயல்பட்டு வரும் உணவகங்கள் தங்களது குறைகளை சரி செய்யவில்லை. இதன் காரணமாக இன்று காலை முதல் தமிழக அரசு பேருந்துகள் மாமண்டூர் உணவகங்களில் நின்று செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார் அசோசியேட்ஸ் ஒப்பந்ததாரர் ஒப்பந்தத்தை ரத்து செய்து, தரமான உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு பேருந்துகள் செல்லும் வழி உணவகம் அனைத்திலும் ஆய்வுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
mamandoor bus motal stop issue