பால் வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்பு..!
Mano Thangaraj takes oath as the Minister of Dairy Resources
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தி.மு.க. அரசு 2021-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு இவர்கள் 02 பேரும் 02-வது முறையாக அமைச்சர் பதவியை இழந்துள்ளனர்.
இந்நிலையில், ஏற்கனவே பால் வளத்துறை அமைச்சராக இருந்து விடுவிக்கப்பட்ட பத்மநாதபுரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மனோ தங்கராஜூக்கு மீண்டும் அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பால் வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மனோ தங்கராஜ், அமைச்சர் பதவியை ஏற்க வேண்டும் என்பதால், இதற்கான பதவி ஏற்பு விழா இன்று மாலை சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் நடைபெற்றது. அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
English Summary
Mano Thangaraj takes oath as the Minister of Dairy Resources