எங்களை ஏதாவது செய்ய நினைத்தால், பாதிப்பு உங்களுக்கு தான் - மத்திய அரசை எச்சரித்த திமுக அமைச்சர்! - Seithipunal
Seithipunal


ஸ்டான்லி, தருமபுரி உள்ளிட்ட 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து விவகாரத்தில், விரைவில் தீர்வு காணப்படும் என்றும், முதல்வர் தமிழகம் திரும்பியதும் உரிய நடவடிக்கை என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார். 

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சென்னை ஸ்டான்லி  அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் கட்டமைப்பு வசதிகளில் சுட்டிக்காட்டப்பட்ட  சில குறைகள் சரி செய்யப்படாததைத் தொடர்ந்து அவற்றின் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்திருக்கிறது. 

இந்த 3 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கைரேகை வழியான வருகைப் பதிவேட்டு கருவியில் விடுப்பு எடுத்த ஆசிரியர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படாதது, கண்காணிப்பு காமிராக்கள் சரியாக செயல்படாதது ஆகியவை தான் அங்கீகாரம் ரத்து செய்யபட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 

இதற்கிடையே, ஸ்டான்லி, தருமபுரி உள்ளிட்ட 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து அதிர்ச்சியளிக்கிறது; குறைகளை சரி செய்து மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து இந்த செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவிக்கையில், "நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசின் கட்டமைப்புகள் மீது குறைகளை சுமர்த்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது.

மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயோமெட்ரிக் காரணத்தால் அங்கீகாரத்தை ரத்து செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது.

சிறிய அளவிலான உள்கட்டமைப்பு காரணங்களை வைத்து ஒட்டுமொத்தமாக அங்கீகாரத்தை ரத்து செய்வது வருத்தம் அளிக்கிறது.

அடுத்த ஆண்டு தேர்தல் வர உள்ளதால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு எதிராக குறை சொல்கின்றன. இதனை அவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இது போன்று ஆணையத்தை வைத்து மாநில அரசுக்கு எதிராக மத்திய அரசு எது செய்தாலும், அது அவர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கடந்த காலம் உறுதி செய்துள்ளது" என்ற அமைச்சர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Medical College Issue Minister Ma Subramaniyan Explain


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->