#BREAKING || நடிகை மீரா மிதுன் கைது.! சைபர் கிரைம் போலீசார் அதிரடி.!  - Seithipunal
Seithipunal


சென்னை சைபர் கிரைம் போலீசார் நடிகை மீரா மீது அதிரடியாக இன்று கைது செய்துள்ளனர்.

நடிகை மீரா மிதுன் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர். அண்மையில் இவர் பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்ததாக, கேரள வைத்து சென்னை போலீஸார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

இந்த வழக்கில் இவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருந்ததாக காவல் துறை தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

ஏற்கனவே அவருக்கு நிபந்தனை ஜாமின் மட்டுமே வழங்கப்பட்டு இருந்ததால், அவர் சென்னை காவல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இருக்கக்கூடிய சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்பது நிபந்தனை.

ஆனால் நடிகை மீராமிதுன் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு காரணமாக தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, இது தொடர்பான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பிணையில் வெளியில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MEERA MITUN ARRESTED MARCH


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->