மாஸ் வெற்றி! இடைத்தேர்தலில் முதலமைச்சர் மனைவி வெற்றி! வெறும் 710 வாக்குகள் பெற்று பாஜக படுதோல்வி! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றம் தேர்தலோடு, நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 46 தொகுதிகளுக்கும், இரு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்துள்ளது. சிக்கிம் மாநிலத்தில் 2 தொகுதிகளில் போட்டியின்றி ஆளும் கட்சி வெற்றிபெற்றது.

இந்த 46 தொகுதிகளில் பாஜக 18 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று உள்ளன.

இதில், மேகாலயா மாநிலம் காம்பேக்ரே தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், ஆளும் தேசிய மக்கள் கட்சி சார்பில் முதலமைச்சர் கான்ராட் கே.சங்மாலின் மனைவி மெஹ்தாப் பூண்டி சங்மா போட்டியிட்டார். 

அவரை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், பா.ஜ.க., போட்டியிட்டன. இன்று வெளியான தேரில் முடிவில், முதலமைச்சர் கான்ராட் கே.சங்மாலின் மனைவி மெஹ்தாப் பூண்டி சங்மா 12678 வாக்குகள் பெற்று (4594 முன்னிலை) வெற்றி பெற்றுள்ளார்.

இரண்டாம் இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் 8084 வாக்குகள் 
மூன்றாம் இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் 7695 வாக்குகள் பெற்றனர்.

நான்காம் இடம் பிடித்துள்ள பாஜக வேட்பாளர் வெறும் 710 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்து டெபாசிட் காலியாகியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Meghalaya assembly by election Results cm wife win


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->