அமைச்சர் துரைமுருகன் பேசிய போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவகாரம்.. 2 பேர் பணியிடை மாற்றம்.! - Seithipunal
Seithipunal


அமைச்சர் துரைமுருகன் பேசிய போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் 2 பேர் பணியிடமாற்றம் செய்யப்ட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் தான் படித்த மேல்நிலைப்பள்ளியில் பேசிக்கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அமைச்சர் துரைமுருகன் கடுப்பாகி பேச்சை முடித்துக் கொண்டார். 

அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 70 ஆண்டுகளுக்கு முன்பு தான் படித்த பள்ளி என்பதால், மலரும் நினைவுகளை பேசிக் கொண்டிருந்தார். 

அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நீண்ட நேரம் நின்றுக்கொண்டு காத்திருந்தார். மின் இணைப்பு வராத‌தால் கடுப்பான அமைச்சர், இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார். பின்னர், அவசர அவசரமாக மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிவிட்டு சென்றார். 

இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் பேசிய போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் 2 பேர் பணியிடமாற்றம் செய்யப்ட்டுள்ளனர்.காட்பாடி தாராபடவேடு பகுதி துணை மின்நிலைய உதவி பொறியாளர்கள் சிவகுமார் ,கருணாநிதி பணியிடமாற்றம் செய்யப்ட்டுள்ளனர்.

தமிழகத்தில் மின் தடையை இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி வரும் நிலையில்,  அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலேயே மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Duraimurugan function issue of power cut 2 people were transferred


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->