நாங்கள் நண்பர்களாகவே இருப்போம் - ரஜினிகாந்த் குறித்து பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன் விளக்கம்.! - Seithipunal
Seithipunal


எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, 'பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரணமானது இல்லை. முதலமைச்சர் மு க ஸ்டாலின் சர்வசாதாரணமாக இதனை செய்கிறார் என்று மூத்த அமைச்சர்கள் குறித்து ரஜினிகாந்த் மறைமுகமாக பேசியிருந்தார்.

ரஜினிகாந்தின் இந்த பேச்சு குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு துரைமுருகன் பதிலளித்ததாவது:- " சினிமாவில் மூத்த நடிகர்கள் எல்லாம் வயசாகி போய், பல் விழுந்து போய், தாடி வளர்த்து கடைசி காலத்திலும் நடித்துக் கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கிறதா? அப்படித்தான் இதுவும்" என்று கூறினார். 

அமைச்சர் துரைமுருகனின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. இதையடுத்து,அமைச்சர் துரைமுருகன் தனது பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதாவது:- "எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம். நாங்கள் எப்போதும் போல நண்பர்களாகவே இருப்போம்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister duraimurugan speech about actor rajinikant


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->