தமிழகம் வந்த நைஜீரியா நாட்டு பயணிக்கு ஒமைக்ரான்? சற்றுமுன் அமைச்சர் மா.சு., பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது,

"நைஜீரியா நாட்டில் இருந்து வந்த பயணிகளில் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு கண்டறியப்பட்ட தொற்றில் செய்யப்பட்ட மரபணு சோதனையில் ஒரு மாற்றம் தெரியவந்தது.

இதனையடுத்து அவர் கிண்டி இன்ஸ்டியூட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கும் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கும் கொரோனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்ட தகவல்கள் அடிப்படையில் இதுவும் ஒமைக்ரான் பாதிப்பு இருக்குமோ என்ற அச்சம் இந்த நிலையில், பெங்களூருக்கு இந்த மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே அனுப்பப்பட்ட இருபத்தி ஒன்பது மாதிரிகளில் நான்கு மாதிரிகள் டெல்டா வைரஸ் தான் என்று உறுதிப்படுத்தப்பட்டது.

இவரின் மரபணு சோதனை இன்று மாலை அல்லது நாளைக்குள் முழு தகவல் வரும். அந்த தகவல் வந்த பிறகு அது ஒமைக்ரான் பாதிப்பு தானா? என்பது குறித்து தெரிவிக்கப்படும். 

இருந்தாலும்கூட அந்த 6 பேரும் கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.  அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது" என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister ma subramaniyan say about omicron dec14


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->