பெரியார் பல்கலை. விவகாரம் : பட்டமளிப்பு விழாவை புறக்கணித்து எதிர்ப்பைக் காட்டிய அமைச்சர் பொன்முடி..!
Minister Ponmudi Boycotted Graduation Ceremony in order to Protest Periyar University Issue
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் 44 ஆவது பட்டமளிப்பு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தலைமையில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்காமல் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உயர்கல்வித் துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளனர்.
முன்னதாக தமிழக ஆளுநர் ஆர். என். ரவிக்கும், திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும் ஆரம்பத்தில் இருந்தே முட்டிக் கொண்டுள்ளது. தமிழக அரசு நிறைவேற்றிய பல்வேறு மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் பல காலமாக கிடப்பில் போட்டுள்ளார்.
மேலும் பல்கலைக் கழக நிகச்சிகளில் பங்குபெறும் ஆளுநர் தொடர்ந்து ஆர். எஸ். எஸ் சித்தாந்தம் குறித்து பேசி வருகிறார். இதனால் திமுக மற்றும் இன்ன பிற தமிழக அரசியல் கட்சிகள் யாவும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.
மேலும் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி கைது விவகாரங்களிலும் ஆளுநரின் தலையீடு இருந்தது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து தற்போது ஊழல் புகாரில் சிக்கியுள்ள சேலம் பெரியார் பல்கலைக் கழக துணை வேந்தர் ஜெகன் நாதனுக்கு மேலும் ஓராண்டுக்கு உயர்கல்வித் துறையின் எதிர்ப்பை மீறி ஆளுநர் பதவி நீட்டிப்பு செய்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் துறை அதிகாரிகள் இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
English Summary
Minister Ponmudi Boycotted Graduation Ceremony in order to Protest Periyar University Issue