திமுக அமைச்சர்களுக்கு வயசாகிவிட்டதோ...? அமைச்சர் பி.டி.ஆரின் உள்குத்து வேலை..!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் மாநகர் 14வது வட்ட திமுக சார்பில் புதூர் பேருந்து நிலையம் அருகே பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா, உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா என முப்பெரும் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மாவட்டச் செயலாளர் தளபதி, மேயர் இந்திராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழா மேடையில் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர் "அமைச்சர் உதயநிதி திமுகவின் அசையும் சொத்து. ஏன் தெரியுமா..? திமுக உறுப்பினர்களின் சராசரி வயது, மக்களின் சராசரி வயது விட அதிகமாக உள்ளது. திமுக அமைச்சர்கள் 70 முதல் 75 வயது உடையவர்களாக உள்ளனர். இதனால் வயது வித்தியாசத்தை குறைக்கும் வகையில் இளைஞர்களுக்கு பொறுப்பு வழங்குவது கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லது.

அந்த வகையில் உதயநிதியை அமைச்சராக்கி உள்ளனர். இதனால்தான் உதயநிதியை திமுகவின் அசையும் சொத்து என நான் கூறினேன். என்னுடன் பாசத்தோடு உரிமையோடு நெருங்கி பழகக் கூடியவர் உதயநிதி. அண்ணன் என்ற முறையில் உதயநிதிக்கு எந்த வகையில் உதவி செய்ய முடியுமோ அந்த வகையில் உதவி செய்வேன்" என பேசியுள்ளார்.

இதன் மூலம் பெரும்பாலான திமுக அமைச்சர்களுக்கு வயதாகிவிட்டது என்பதை மறைமுகமாக பேசியுள்ளார். ஏற்கனவே திமுகவின் மூத்த அமைச்சர்களுடன் பழனிவேல் தியாகராஜனுக்கு கருத்து வேறுபாடு இருந்து வரும் நிலையில் இவரின் பேச்சு திமுக வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பிடிஆரின் பேச்சின் மூலம் மூத்த அமைச்சர்கள் திமுகவில் இருந்து ஓரங்கட்டப்படுவார்களோ என சந்தேகம் எழுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister PTR said DMK ministers are getting old


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->