இந்தியா மேல கைவச்சா சும்மா விடமாட்டோம்., எச்சரித்த பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.!
Minister Rajnath Singh say about India
அமெரிக்காவிற்கு பாதுகாப்புத் துறை சம்பந்தமாக பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், நேற்று சான்பிரான்சிஸ்கோ நகரில் இந்திய வம்சாவழியினர் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் தெரிவிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா வலிமையான ஒரு நாடாக உருவெடுத்துள்ளது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு, பெருமை, கவுரவம் உயர்ந்துகொண்டே செல்கிறது.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக முன்னேறி உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த கனவு சாத்தியமாகும். இதனை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களின் வீர தீரத்தை உலகமே பாராட்டியது. இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் யாரும் தப்பிக்க முடியாது. யாரையும் நாங்கள் விட்டுவிட்டு வைக்க மாட்டோம்" என்று இந்திய வம்சாவழியினர் மத்தியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது உரையை ஆற்றினார்.
ராஜ்நாத் சிங்கின் இந்த உரை சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுப்பது போல அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
English Summary
Minister Rajnath Singh say about India