கடந்த 10 ஆண்டுகளாக... தமிழகத்திற்கு ஒன்றுமேயில்லை - உதயநிதி ஸ்டாலின் தாக்கு.!
minister Udayanidhi Stalin campaign
தஞ்சாவூர், கீழவாசல் காமராஜர் சிலை அருகே தி.மு.க வேட்பாளர் ஆதரித்து இளைஞரணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசி இருப்பதாவது, இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். பா.ஜ.கவும், அ.தி.மு.கவும் சேர்ந்து தமிழ்நாட்டு உரிமைகளை பறித்து விட்டன.
இவற்றை மீட்டெடுக்க தி.மு.க கூட்டணி தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
சசிகலாவின் காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை பெற்றவர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் சசிகலா சிறைக்கு சென்றபோது அவர் யார் என கேட்டார்.
இத்தகைய குணம் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் அ.தி.மு.கவிற்கும் துரோகம் செய்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. தமிழகத்திடம் இருந்து பெரும் ஒவ்வொரு ரூபாய் வரியிலும் 29 பைசா மட்டுமே மத்திய அரசு திருப்பி வழங்கியுள்ளது.
நாங்கள் மோடிக்கும் இ.டி.க்கும் பயப்படவே மாட்டோம். எங்களுக்கு மரியாதை கொடுத்தால் திருப்பி கொடுப்போம். இல்லையென்றால் மிதிப்போம். பா.ஜ.க., அ.தி.மு.க ஆட்சியில் இழந்த தமிழக உரிமைகளை மீட்க இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
English Summary
minister Udayanidhi Stalin campaign