சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மோடிக்கு மு.க ஸ்டாலின் கடிதம்!! - Seithipunal
Seithipunal


தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் நாடு முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும், இந்தியாவில் சமூக நீதி, சமத்துவத்தை நிலைநாட்ட சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய சாதியவாரிய கணக்கெடுப்பு அவசியம் எனவும் வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறாத நிலையில் அடுத்து நடைபெறவுள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பும் சேர்த்து நடத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ள மு.க ஸ்டாலின் மாநில அளவில் இதற்கான  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்

இந்தியாவின் சட்டப்பூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதி தொடர்பான தரவுகளுடன் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே சமூக நீதி, சமத்துவம் நிலைநாட்டிட முடியும். சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திட இயலும். கடந்த 90 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை மற்றும் சமூக பொருளாதாரம், நிலப்பரப்பு உள்ளிட்டவைகள் பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது.

ஆனால் சமூதாயத்தில் பின்தங்கிய பிரிவினர் இன்னும் தொடர்ந்து பின் தங்கிய நிலையில் இருக்கின்றனர். எதிர்வரும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பையும் ஒருங்கிணைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த முயற்சி வளர்ச்சியின் பலன்களை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய பிரிவினருக்கு எடுத்துச் செல்லும் என்பதிலும், வலிமையான இந்தியாவை உருவாக்கும் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்து நடத்த வேண்டும் என்ற தனது கோரிக்கை மீது உங்கள் தனிப்பட்ட தலையீடை எதிர்பார்க்கிறேன் என பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் அமைந்துள்ள இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அம்மாநிலத்தில் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பீகாரை பின்பற்றி தமிழகத்திலும் மாநில அரசு சாதியவாரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK Stalin letter to Modi to conduct caste wise census


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->