அடுத்த ரவுண்டுக்கு ரெடி.. தயாராகும் மு.க ஸ்டாலின்.!! வெளியான பரபரப்பு தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற முடிந்த மக்களவைப் பொதுத் தேர்தலுக்காக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக வட மாநிலங்களில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மு க ஸ்டாலின் பிரச்சார செய்ய உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரச்சார சுற்றுப்பயண விவரம் தயாராகி வருவதாகவும் விரைவில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை 20 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரச்சாரம் செய்துள்ளார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். அதனைத் தொடர்ந்து இன்னும் ஆறு கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க புறப்படுகிறார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்.

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் மு.க ஸ்டாலின் வாக்கு சேகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin planing to campaign for indi alliance in North States


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->