முப்படை தளபதிகளின் குழு தலைவராக ராணுவ தளபதி எம்.எம்.நரவானே நியமனம்.!
MM Naravane
கோவை மாவட்டம், சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவ மற்றும் 13 பேருடன் புறப்பட்ட ஹெலிகாப்டர், குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே அந்த பறந்து கொண்டு இருந்த போது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.
விழுந்து நொறுங்கிய உடன், ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்தது. ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரின் மனைவி, ராணுவ அதிகாரிகள் உட்பட 13 பேர் உயிர் இழந்துள்ளனர். 80 % தீக்காயங்களுடன் உயிர்பிழைத்த விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் அவர்களும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், முப்படை தளபதிகளின் குழு தலைவராக ராணுவ தளபதி எம்.எம்.நரவானே நியமிக்கப்பட்டுள்ளார்.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவால், முப்படை தலைமை தளபதி தேர்வு செய்யப்படும் வரை, இடைக்கால நடவடிக்கையாக, எம்.எம்.நரவானே குழு தலைவராக செயல்படுவார் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.