திமுகவுக்கு கல்தா... கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி.!!
MMK reconsider alliance with DMK
திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான தொகுதிகளும் இறுதி செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்த மனிதநேய மக்கள் கட்சி திமுக தலைமையுடன் நடத்திய முதற்கட்ட பேச்சு வார்த்தையில் தங்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது.
ஆனால் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. இதனால் திமுக உடனான கூட்டணி நிலைப்பாடு குறித்து மறு பரிசீலனை செய்ய உள்ள மனிதநேய மக்கள் கட்சி இன்று கூட்டணி நிலைபாடு குறித்து இறுதி முடிவு எடுக்க திருச்சி எல்.கே.எஸ் மண்டபத்தில் அக்கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் திமுகவுக்கு அளித்து வரும் ஆதரவு குறித்து மறுபரிசீலனை செய்து கட்சியின் உயர்மட்ட குழு முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து மனிதநேய மக்கள் கட்சி வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
MMK reconsider alliance with DMK