நாளை களத்தில் குதிக்கும் மக்கள் நீதி மய்யம்., வெளியானது அறிவிப்பு,!
mnm announce protest march
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் போராட்டத்தை அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் மக்கள் நீதி மய்யம் சார்பாக நாளை(27.03.2022 -ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வெகுஜன மக்களை நாள்தோறும் நசுக்கும் மத்திய மாநில அரசாங்கங்களின் விலை உயர்வை கண்டித்து மக்களுக்காக மய்யம் என்னும் ஒற்றை குரலோடு மய்யத்தினர் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்கின்றனர்"
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
mnm announce protest march