இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையை கொண்டாடுவதா - மாடல் அழகி வேதனை.! - Seithipunal
Seithipunal


இந்திய அமெரிக்க முன்னாள் மாடல் அழகியும், எழுத்தாளருமான பத்மா லட்சுமி, இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையை கொண்டாடுவது கவலை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். 

இது குறித்து பத்மா லட்சுமி தனது ட்விட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

"இந்துக்களுக்கு இந்திய நாட்டிலோ அல்லது மற்ற நாட்டிலோ அச்சுறுத்தல் இல்லை என்பதை இந்துக்கள் புரிந்து கொள்ளுங்கள். உண்மை ஆன்மீகம் எவ்விதத்திலும் வெறுப்பை உண்டாக்குவதற்கு இடமளிக்காது. இந்த பரந்த உலகில் அனைத்து மதத்தினரும் நிம்மதியாக வாழ வேண்டும்.

பரவலான முஸ்லீம் எதிர்ப்பு வாசகங்கள் அச்சத்தை ஏற்படுத்துகிறது. மக்களின் மனதில் விஷத்தை உண்டாக்குகிறது. மேலும், இது போன்ற விமர்சனம் ஆபத்தானது. நீங்கள் உங்களை விட ஒருவர் குறைவானவர் என்று கருதினால், நீங்கள் அவருக்கு எதிரான ஒடுக்கு முறையில் பங்கேற்பதாக அர்த்தம்". என்று பத்மா லட்சுமி கூறினார். 

இதனை தொடர்ந்து பத்மா லட்சுமி, ஜஹாங்கிர்புரி ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் குறித்தும், மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் நகரில் நடைபெற்ற  ராம நவமி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை குறித்து செய்திக் கட்டுரைகளை சுட்டிகாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Model Beauty Worrying about Celebrating Violence Against Islamists


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->