அச்சுறுத்துவதும், மிரட்டுவது போன்ற மோடி அரசின் நடவடிக்கை மேற்கு வங்கத்தில் செல்லுபடியாகாது - மம்தா பானர்ஜி!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரதம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வகையில் நாடியா மாவட்டத்தில் மஷிவா மொய்த்ராவை ஆதரித்து நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் மம்தா பேனர்ஜி பேசுகையில்,  குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் மதுவாக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்கள் குடியுரிமை பெறுவார்கள் என பாஜக கடந்த 10 ஆண்டுகளாக புலிகளை பரப்பி வருகிறது. குடியுரிமையை அனுபவித்து வரும் ஒருவரின் குடியுரிமையை பறித்து முகாம்களுக்கு அனுப்பி வைப்பது இந்த சட்டத்தின் நோக்கம்.


வாக்கு பதிவு முடிந்து நான்கு நாட்களுக்கு பிறகு வாக்கு சதவீதத்தை அதிகரித்து தேர்தல் கமிஷன் அறிவித்து இருக்கிறது. மாநில முதலமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் மக்களை அச்சுறுத்துவதும், மிரட்டுவது ,அழுத்தம் கொடுப்பது போன்ற மோடி அரசின் நடவடிக்கை மேற்கு வங்கத்தில் செல்லுபடி ஆகாது என்று மம்தா பானர்ஜி பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi Govt action of threats and intimidation is not valid in West Bengal Mamata Banerjee


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->