பாஜகவின் தோல்விக்கு மோடியே போதும் - பிரகாஷ் ராஜ் ! - Seithipunal
Seithipunal


கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில்  உரிமைப் போராளியின் பெருமைமிகு கண்காட்சி இன்று தொடங்கியது. நடிகர் பிரகாஷ் ராஜ் இதில் கலந்து கொண்டு கலைஞரின் வரலாற்றுப் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார்.

அப்போது பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ், நான் என் வாழ்நாளில் நிறைய ஷூட்டிங் பார்த்திருக்கிறேன். அதற்கு மக்கள் அவர்களே வருவார்கள். ஆனால் கன்னியாகுமரியில் இவர்களே ஆடியன்ஸை கூட்டிப் போகிறார்கள் என்று கூறிநார். மேலும் பாராளுமன்ற தேர்தல் முடிவு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அரசியலில் எப்போதும் எதிர்க்கட்சி ஜெயிப்பதில்லை. ஆளுங்கட்சி தான் தோற்றுப்போகும். 

 

அதன்படி இப்போது ஆளும் கட்சி தோற்க செய்ய வேண்டியதை மோடியே செய்துவிட்டார். பாஜகவின் தோல்விக்கு மோடியே போதும் என்று கூறினார். மேலும் பிரதமரின் காந்தி குறித்த கருத்து பற்றி பிரகாஷ் ராஜிடம் கேட்டபோது, காந்தி திரைப்படம் வந்த பிறகு தான் காந்தியை பற்றி உலகிற்கு தெரியுமாம். 

அதேபோல் இவர் வந்தபிறகு தானே எங்களுக்கு கன்னியாகுமரியை கூட தெரிய வந்திருக்கிறது. இவர் அங்கு தியானம் செய்வதால் தான் விவேகானந்தரையே தெரியும்" என்று கிண்டலாக கூறினார் பிரகாஷ் ராஜ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi isEnough For BJPs Lose Prakash Raj


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->