இந்து முஸ்லிம் விவகாரம் : பொது வாழ்க்கையிலிருந்து மோடி விலக வேண்டும் - மல்லிகார்ஜுனை கார்கே காட்டம்!! - Seithipunal
Seithipunal


மோடி பொதுவாழ்க்கையில் இருந்து விலக வேண்டும் என்றும் மல்லிகார்ஜுன கார்கே கட்டமாக தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும், மே 20ம் தேதி 5ம் கட்ட தேர்தல் 49 தொகுதிக்கும் மக்களவை தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

 இந்த நிலையில் ஆறாம் கட்ட மக்களவை தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் கட்சித் தலைவர்களும் தயாராகி தீவிரம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேட்டியளித்தார்.

பேட்டியில் அவர் பேசுகையில், பிரதமர் மோடியின் நோக்கம் பரிசுத்தமாக இல்லை. பிரச்சாரங்களில் மோடி இந்து முஸ்லிம் என பிரித்து வெறுப்பூட்டும் வகையில் பேசுகிறார்.

 மறுபடியும் இந்து முஸ்லிம்களை பிரித்து பேசினால் பொது வாழ்க்கையில் தொடரும் உரிமை எனக்கு இல்லை என்று அவரே கூறுகிறார். ஆனால் தினந்தோறும் இதையே பேசிக் கொண்டிருப்பதால் மோடி சொன்ன வாக்கை வேண்டும்.

இந்து முஸ்லீம்களை பிரித்து பேசினால் பொது வாழ்க்கையில் தொடரும் உரிமை தனக்கில்லை என்று கூறும் மோடி பொது வாழ்க்கையில் இருந்து விலக வேண்டும் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi should step down from public life Mallikarjuna Karke


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->