"ஆளுநரின் அத்துமீறலை தமிழ்நாடு அனுமதிக்காது " - எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து இலக்கா இல்லாத அமைச்சராக செயல்பட்டு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்குவதாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அறிவித்துள்ளார்.

அதில் அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் லஞ்சம் பெற்றது தொடர்பான வழக்கில் நீதிமன்ற காவலில் வைத்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் அவர் மீது பல்வேறு குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடித்தால் வழக்குகளின் விசாரணை மற்றும் அரசு இயந்திரம் சரி வர நடைபெறாது.


செந்தில்பாலாஜி அமைச்சர் என்ற அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக்கூடும். இதன் காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அறிவித்துள்ளார்.

இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "அமைச்சரின் நியமனமும், நீக்கமும் முதல்வரின் அதிகாரம். கவர்னரே! உங்கள் மூக்கு எவ்வளவு நுழையலாம் என்பதற்கு அரசியல் சாசனம் கிழித்துள்ள கோட்டை மீறாதீர்! அத்து மீறலை அனுமதிக்காது தமிழ்நாடு!" என் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MP SU Venkatesan condemnation to TN governor for senthil Balaji dismiss


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->