அடுத்த விக்கெட் காலி.. முக்குலத்தோர் புலிப்படை திமுகவுக்கு ஆதரவு.. குஷியில் மு.க‌ ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


திமுக தலைமையிலான கூட்டணிக்கு நடிகர் கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை சங்கம் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் "பாஜக எனும் பாசிச சதாதன சக்தியை வீழ்த்த அடிமை திமுகவை விரட்ட நாம் ஒரு குடையின் கீழ் அணியாக மாற வேண்டி இருக்கிறது அதற்கான களமாக இந்த நாடாளுமன்ற தேர்தலை பயன்படுத்தி நாட்டை காக்க வேண்டும்

மதவெறி சக்திகளை அடியோடு விழுத்தி இந்தியாவில் மத நல்லிணக்க மாண்புற மக்கள் ஜனநாயகத்தை மீட்க சமூக நீதியை காக்க இந்தியா கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் திமுகவை முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரிக்கிறது. 

இனி மோடி ஆட்சி மீண்டும் வந்தால் இந்திய பெரும் முதலாளிகளின் கையில் கார்ப்பரேட்டின் கொள்ளை கூடாரம் ஆகவிடும் கடந்த 10 ஆண்டு காலமாக மத்தியில் ஆட்சி செய்த பாஜக அரசின் மக்கள் விரோத ஆட்சியை அகற்றிட தமிழ்நாட்டில் அடிமை துரோக கட்சியான அதிமுகவை இந்த நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பாகும். 

திமுகவிற்கு பல்வேறு தோழமைக் கட்சிகள் தனது ஆதரவை தெரிவிக்கும் அதே வேளையில் பலம் வாய்ந்த இக்கூட்ட அணியை 40 இடங்களிலும் வெற்றி பெற செய்ய திமுகவிற்கு எங்களது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். 

மக்கள் விரோத சமாதான சக்திகளை விரட்ட அடிமை துரோக திமுகவை வீழ்த்த திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து 40 தொகுதிகளும் முக்குலத்தோர் புலிகள் படைத்தனது பிரச்சாரத்தை மேற்கொள்ளும்" என அறிவித்துள்ளார்.

முக்குலத்தோர் புலிகள் படை கட்சியின் 5 முக்கிய கோரிக்கைகள்:

1) மதுரை விமான நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் பெயரை சூட்ட ஒன்றிய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

2) பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவை (அக்டோபர் 30) அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்.

3) மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கள்ளர் மறவர் அகமுடையார் ஆகியோரை தேவரினம் என அறிவித்த அரசாணையை நரைமுடை படுத்திட வேண்டும் இரண்டரை கோடி மக்கள் தொகை உள்ள முக்குலத்தோர் சமுதாயத்திற்கு 25% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 

4) தமிழ்நாட்டில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

5) ஒன்றிய அரசு புதிதாக கட்டவுள்ள பாராளுமன்றத்தில் வெள்ளையரை வெளியேற்ற அரும்பாடு பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்கள் சிலை அமைத்திட வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mukkulathor puligal padai support DMK alliance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->