#BigBreaking || பிரதமர் மோடி - இளையராஜா விவகாரம் || சற்றுமுன் கி வீரமணி, ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது வன்கொடுமை சட்டம் பாய்கிறது.! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடியின் புத்தக முன்னுரை எழுதிய இளையராஜா குறித்து, சாத்திய ரீதியாக விமர்சனம் செய்த, திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று, சென்னை காவல் துறைக்கு தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இசையமைப்பாளர் 'இசைஞானி இளையராஜா' பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், அம்பேத்கர் அவர்களையும் ஒப்பிட்டு முன்னுரை எழுதி கருத்து தெரிவித்திருந்தார். இதற்க்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த திராவிடர் கழகத்தின் தலைவர் கி வீரமணி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், இளையராஜாவின் ஜாதியைக் குறிப்பிடும் வகையில் அவதூறாக பேசி கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். 

இது குறித்த தேசிய எஸ்சி எஸ்டி ஆணையத்திற்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் பட்டியலின சமூகம் குறித்து இழிவாக பேசியதால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் சென்னை காவல் துறைக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

பட்டியலின சமூகம் குறித்து கி வீரமணி மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் இழிவாக பேசியதால் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், சென்னை காவல் துறைக்கு எஸ்சி எஸ்டி ஆணையம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு கடிதம் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, சென்னை காவல்துறை அறிக்கை தரவும் தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

N SC ST order for chennai cops


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->