ஆளுநரின் சகோதரர் மறைவு! வேதனையில் முதல்வர் ஸ்டாலின் சொன்ன செய்தி!
Nagaland Governor Ila Ganesan brother death CM Stalin Condolence
பாஜகவில் மாநில தலைவர், தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள இல கணேசன், தற்போது நாகாலாந்து மாநில ஆளுநராகப் பணியாற்றி வருகிறார் இல.கணேசன்.
இந்நிலையில், நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலன் (வயது 83) வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். இல.கோபாலனின் உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இல.கோபாலனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் அவர்களின் அண்ணன் இல.கோபாலன் இன்று (08-01-2025) காலை மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் மாறாத பற்று கொண்ட திரு.இல.கணேசன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பினால் அவரைப் போன்றே நானும் வருந்துகிறேன். உடன்பிறந்த அண்ணனை இழந்து தவிக்கும் அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
Nagaland Governor Ila Ganesan brother death CM Stalin Condolence