நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி.. இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாகாலாந்து, மேகாலயா மற்றும் திரிபுரா சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

நாகாலாந்து, மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய 3 மாநிலங்களின் 5 ஆண்டுகால பதவிக்காலம் முறையே மார்ச் 12, மார்ச் 15 மற்றும் மார்ச் 22 ஆகிய தேதிகளில் முடிவடைகிறது. இதனையடுத்து 3 வடகிழக்கு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலிலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, திரிபுரா மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் பிப்ரவரி 16-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேகாலயா மற்றும் நாகாலாந்து பிப்ரவரி 27-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும், 3 மாநிலங்களிலும் மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், திரிபுரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது. மேலும், மேகாலயா மற்றும் நாகாலாந்தில் ஆளும் கட்சியில் பாஜக கூட்டணி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagaland, thiripura, Meghalaya States assembly election Date announced


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->