ரூ.4 கோடி விவகாரம்.. திமுக அமைச்சருக்கு என்ன தொடர்பு? நயினார் நாகேந்திரன் தடாலடி.!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேலூரில் தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியின் இப்போது சென்னையில் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார் . அதற்கு பதில் அளித்த நைனார் நாகேந்திரன் "எனக்கும் அந்த சம்பவத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அது உண்மையாக இருந்தால் தான் புகார் அளிக்க முடியும். 

எனக்கு வேண்டப்பட்டவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்துள்ளார்கள் என்றால் திமுகவில் இருக்கும் முக்கிய நபர்கள் எல்லாம் எனக்கு வேண்டப்பட்டவர்கள் தான். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன எனக்கு நண்பர்தான். எனக்கு தொடர்புடைய இடங்களில் பணத்தை பிடித்ததாக தெரியவில்லை. எனக்கு வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர். தொழிலுக்காக கூட எடுத்து சென்று இருக்கலாம். 

இதன் பின்னணியில் உள்நோக்கம் இருக்கா? இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் என்னை டார்கெட் செய்றாங்க.! திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் தாமரைக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் திமுக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

எனக்கும் பிடிபட்ட பணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேர்தலில் திசை திருப்புவதற்காக திமுகவின் வேலைகள் தான் இது. வேறு ஒன்றும் கிடையாது" என விளக்கம் அளித்துள்ளார் நயினார் நாகேந்திரன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nainar nagenthiran explain rs4crs not his money


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->