செந்தில் பாலாஜிக்கு கேட்டீங்க.! எஸ்.ஜி சூர்யாவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதா..? நாராயணன் திருப்பதி ஆவேசம்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி சூர்யா பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்படும் இவர் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மைப் பணியாளரின் உயிர் பறிபோனதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார்.

எங்கே உங்கள் உணர்ச்சி மிகுந்த வார்த்தைகள்! ஆளும் பாஜக அரசுக்கு எதிராக என்றால் உடனே முந்திக்கொண்டு வருவீர்கள். இப்போது எங்கே சென்று விட்டீர்கள்? பதுங்கி விட்டீர்களா அல்லது பம்மி விட்டீர்களா? பிரிவினை வாதம் பேசி சிவப்பு கொடியைப் போர்த்திக் கொண்டு அரசியல் செய்யும் உங்கள் போலி அரசியல் அந்த மலக்குழியை விட மோசமாக துர்நாற்றம் வீசுகிறது. மனிதனாக வாழ வழி தேடுங்கள் தோழரே" என சு.வெங்கடேசனை கடுமையாக சூர்யா விமர்சித்து இருந்தார்.

இது குறித்து சி.பி.ஐ.எம் கட்சி சார்பில் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் நேற்று இரவு 11.15 மணியளவில் சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்த எஸ்.ஜி சூர்யாவை மதுரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்திய பிறகு அவரை மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா நள்ளிரவில் கைது செய்ததை அறிந்த பாஜகவினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு குவிந்த நிலையில் திடீரென்று பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் தொற்றிக் கொண்டது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதால் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் சூர்யா கைது செய்யப்பட்டதற்கு பாஜக சார்பில் இருந்து கடன் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

அந்த வகையில் பாஜக மாநில செயலாளர் சூரியா கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கைது என்ற பெயரில் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாக தெரிகிறது.

செந்தில் பாலாஜி என்ன சாதாரமானவரா? ஓடிப் போய் விடுவாரா? Crpc 41ஏ ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டதா? என்றெல்லாம் கேட்டவர்கள், உச்ச நீதி மன்றத்தின் வழிகாட்டுதலின் படி  சூர்யாவின் Crpc 41ஏ ன் கீழ் அறிவிக்கை அளித்து விசாரணை செய்யாமல், சட்ட விரோதமாக கைது செய்தது ஏன்?" என கேள்வி எழுப்பி உள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Narayanan Thirupathy condemns BJP state secretary SG Surya arrest


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->