கர்நாடகாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பரப்புரை.!!
Narendra Modi campaign in Karnataka 4th time
நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி என்று கர்நாடக மாநிலத்தில் பரப்பரை மேற்கொள்கிறார். கர்நாடகாவில் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி மற்றும் மே 7ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
இதற்காக ஏற்கனவே மூன்று முறை பரப்புரை மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று நான்காவது முறையாக கர்நாடக சென்று பரப்புரை மேற்கொள்கிறார்.
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாபூரில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இன்று மாலை பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெறும் பரப்புரை கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
தமிழ்நாட்டில் நேற்று 39 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற முடிந்த நிலையில் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி கர்நாடகாவில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Narendra Modi campaign in Karnataka 4th time