அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்திய எனது நெருங்கிய நண்பர்.!! - விஜயகாந்திற்கு நரேந்திர மோடி இரங்கல்.!! - Seithipunal
Seithipunal


தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் "விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். தமிழ் சினிமாவின் சகாப்தங்களில் ஒருவரான விஜயகாந்த் தனது சிறந்த நடிப்பின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். அரசியல் தலைவராக பொது சேவை மற்றும் தமிழ்நாட்டின் அரசியலில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனது நெருங்கிய நண்பராகவும் கடந்த காலங்களில் அவருடனான சந்திப்புகளையும் நினைவு கூறுகிறேன். மிகுந்த வருத்தத்திற்குரிய இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” என பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Narendra Modi condoles Vijayakanth


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->