SC/ST, OBC இட ஒதுக்கீடு.. காங்கிரசுக்கு நரேந்திர மோடி‌ நேரடி சவால்.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நெருங்கியுள்ள சூழலில் அமேதி தொகுதியை பார்த்து அச்சமடைந்த ராகுல் காந்தி தற்போது ரேபரேலியை தேர்வு செய்துள்ளார். காங்கிரஸின் மிகப்பெரிய தலைவர் தேர்தலில் போட்டியிடாமல் ஓடி ஒளிந்து கொள்வார் என நான் கூறியது நடந்துள்ளது.

அதேபோன்று நான் முன்பு கூறியது போலவே ராஜஸ்தானுக்கு ஓடியவர் மாநிலங்களவை மூலம் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார் என சோனியா பற்றி பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் இந்திய அரசியல் சாசனத்தை மதம் சார்ந்து திருத்தம் செய்ய மாட்டார்கள் என எழுதித் தர முடியுமா ?

எஸ் சி, எஸ் டி, ஓ பி சி பிரிவினருக்கான இட ஒதுக்கீடை ரத்து செய்துவிட்டு அதை மத நம்பிக்கையில் வழங்க மாட்டோம் என எழுதி தர முடியுமா? காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் இவ்வாறு இட ஒதுக்கீடு முறையை மாற்றி அமைக்க மாட்டோம் என எழுதித் தர முடியுமா என பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக சவால் விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Narendra Modi directly challenged Congress on reservation


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->