பாஜகாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.4847 கோடி.. மற்ற கட்சியின் மதிப்பு எவ்வளவு தெரியுமா.?
National parties assets value
2019 - 20ம் ஆண்டில் பாஜகவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.4847.78 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.
2019 - 2020ம் ஆண்டுக்கான சொத்து விவரங்களை அரசியல் கட்சிகள் தாக்கல் செய்துள்ளது. இதில், 7 தேசிய கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.6988.57 கோடி ஆகும். இதில், பாஜகவுக்கு மட்டுமே 69.37 சதவீத சொத்து மதிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (association for democratic reforms -ADR) வெளியிட்டிருக்கும் இந்த புள்ளிவிவரத்தின்படி, இரண்டாவது இடத்தில் பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மதிப்பு ரூ.698.33 (9.99%) கோடி ஆகும்.
மொத்தம் 44 மாநில கட்சிகளில் முதல் 10 கட்சிகளிடம் மட்டும் 95.27 சதவீதம் உள்ளது. அதாவது, ரூபாய் 2,028.715 கோடி உள்ளது. மற்ற கட்சிகளின் சொத்து மதிப்பு ரூ.2129.38 கோடி உள்ளது.
இதில், மாநில கட்சிகளான அஇஅதிமுகவிற்கு வைப்புத் தொகையாக மட்டும் ரூ.246.90 கோடி ரூபாய் உள்ளதாகவும், திமுகவிற்கு 162.425 கோடி ரூபாய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
National parties assets value