தேமுதிக பிரமுகர் நிறுவனத்தில் ஐடி ரெய்டு., 250 கோடியை முழுங்கியது அம்பலம்.! 12 கோடி ரூபாய் பறிமுதல்.!
NEIVELI IT RAID REPORT
தேமுதிக பிரமுகர் ஜெய்சங்கரின், ஜெயப்பிரியா சிட்பண்ட்ஸ் நிதிநிறுவம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில், 12 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் அமைந்துள்ள ஜெயப்பிரியா நிதி நிறுவனம் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில், வருமானவரித் துறையினர் 12 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 16ஆம் தேதி நெய்வேலி, சென்னை, கோவை, நீலகிரி உள்ளிட்ட 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில், நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் நடைபெற்ற இந்த வருமான வரி சோதனையில் கணக்கில் வராத 12 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் சற்று முன்பு தெரிவித்துள்ளனர்.
250 கோடி ரூபாய் கணக்கில் வராத பரிவர்த்தனை மற்றும் சொத்து ஆவணங்கள், இந்த வருமான வரி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கணக்கில் வராத 250 கோடி ரூபாய் அசையா சொத்துகளை, ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்ததும், இந்த வருமான வரி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரபல தொழிலதிபராக வலம் வரும் ஜெய்சங்கர், தேமுதிக பிரமுகர் என்பதால், இது தேமுதிகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஜெய்சங்கர் கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது வேட்பாளராக போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.