ஆட்டம் கண்ட அரசியல் கட்சிகள்.. தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு.! - Seithipunal
Seithipunal


தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் முடிவு அறிவிக்கப்பட்ட நாட்களிலிருந்து தேர்தல் ஆணையம் அறிவிக்கும் நாட்களுக்குள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தலில் செலவு கணக்கு முறை படி உரிய படிவத்தில் பராமரிக்க வேண்டுமென ஏற்கனவே தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அவ்வாறு பராமரிக்கப்பட்ட கணக்கில் நகல்களை தேர்தல் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் ஆணையம் அறிவிக்கும் நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். 

தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்த வேட்பாளர்கள் வருங்காலங்களில் 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள் ஆவார்கள். 

இந்நிலையில், இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளில் தற்போது வரை 15 கட்சிகள் மட்டுமே தேர்தல் செலவு கணக்கை அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். கணக்கை தாக்கல் செய்யாத 2174 அரசியல் கட்சிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வருவாய் துறைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 

மேலும், வருமான கணக்கு தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்யாத 2056 அரசியல் கட்சிகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் விதமாக அது குறித்த விபரங்களை மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் இணையதளத்தில் வெளியிடுவதோடு, உரிய ஆவணங்களுடன் 30 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வாய்ப்பு அளிக்கலாம் என கூறப்படுகிறது. நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைய விதிகளின்படி சலுகையை பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new announcement by the election commission


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->