டெல்லியில் புதிய முதலமைச்சரும், முடங்கிய திட்டப்பணிகளும்!...என்ன நடக்கிறது? - Seithipunal
Seithipunal


டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

இதையடுத்து 6 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 13ம் தேதி திகார் சிறையில் இருந்து விடுதலையானார். இதனை தொடர்ந்து 15ம் தேதி ஆம் ஆத்மி நிர்வாகிகள் மத்தியில் பேசிய கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து ராஜினாமா செய்தார்.

பின்னர்  டெல்லியில் புதிய முதலமைச்சராக அதிஷியை, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் ஒரு மனதாக தேர்வு செய்த நிலையில், அவர் கடந்த 21-ம் தேதி டெல்லி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

முன்னதாக டெல்லியில் முடங்கிய திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர் அதிஷிக்கு, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருந்த நிலையில், டெல்லி தலைமை செயலகத்தில் முதலமைச்சர் அதிஷி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலத்தில் திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அமைச்சர்களுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New chief minister in delhi stalled projects what is going on


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->