அடுத்தமுறை துபாய்க்கு வரும்போது பிரதமராக வரணும்..ஸ்டாலினுக்கு துபாய் வாழ் தமிழர் கோரிக்கை!
Next time he comes to Dubai he will become the Prime Minister
துபாயில் நடந்து வரும் சர்வதேச எக்ஸ்போவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் 4 நாள் அரசு பயணமாக துபாய் சென்றுள்ளார்.
தமிழக முதல்வராக முகஸ்டாலின் பதவியேற்ற பின் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரக அரசு சார்பில் மு க ஸ்டாலினுக்கு இன்று நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இந்திய பரிசு அமீரக அமைச்சர் மற்றும் அதிகாரிகளும் நடைபெற்ற சந்திப்பின்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கப்பட்டது. அமராவதி மரத்தினால் உருவாக்கப்பட்ட பாய்மரக் கப்பலில் அந்த நினைவு பரிசு இருக்கிறது. இதனை பெற்றுக் கொண்ட ஸ்டாலின் 'கலைஞர் தி லைஃப்' என்ற புத்தகத்தை அமீரக அமைச்சருக்கு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து துபாய் எக்ஸ்போவில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்த துபாய் வாழ் தமிழர் ஒருவர் அடுத்த முறை நீங்கள் துபாய் வரும்போது பிரதமரா வரணும் சார் என்று அன்புக் கோரிக்கை விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
English Summary
Next time he comes to Dubai he will become the Prime Minister