வெளிநடப்பு செய்த திமுக எம்.பிக்கள்! பதிலடிகளால் பந்தாடிய நிர்மலா சீதாராமன்.!!
Nirmala Sitharaman criticized DMK MPs who walked out from Parliament
நாடாளுமன்றத்தின் மக்களவையில் திமுக எம்பி மதுரை எய்ம்ஸ் குறித்த கேள்வி எழுப்பியதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது தமிழில் பேசிய அவர் "மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையானது 1977 கோடி ரூபாயில் கட்டப்படுகிறது. அதற்காக 1670 கோடி ரூபாய் காண கடனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. மத்திய அரசின் செலவில் கட்டப்படும் இந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கடனை மத்திய அரசு தீர்த்து வைக்கும்.
இதன்மூலம் ஒரு ரூபாய் கடன் கூட தமிழக அரசுக்கு சேராது. எனவே எதிர்க்கட்சிகள் மக்களவையில் இதுகுறித்து பேசும்போது தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம். பிற மாநிலங்களில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு 750 படுக்கை வசதிகள் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதலாக 150 படுகைகள் ஒதுக்கி 900 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக கட்டப்படும்.
அந்த கூடுதல் 150 படுக்கை வசதிகள் கூட தொற்று வியாதிகள் தடுப்பு வார்டு கட்டுவதால் வழங்கப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசுக்கு கடனும் இல்லை கூடுதல் படுக்கை வசதிகளும் கிடைக்கிறது" என நிமலா சீதாராமன் பதில் அளித்த போது குறுக்கிட்ட திமுக எம்பி தயாநிதிமாறன் எப்போ..? எப்போ.? என கேள்வி எழுப்பி கோஷமிட்டார். இதனால் கடுப்பான நிர்மலா சீதாராமன் "இப்ப வரைக்கும் கடன் வாங்குற வெட்கமா இல்லையா என கேட்டாங்க. இப்போ கட்றோம்னு சொன்ன அப்புறம் எப்போ என கேக்குறாங்க. பொய் சொல்ல வேண்டாம்"என பதிலடி கொடுத்தார்.
இதனால் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிர்மலா சீதாராமனை பேசவிடாமல் அமளியில் ஈடுபட்டனர். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு நிதி அமைச்சர் பதிலளிக்கும் போது எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமளியில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தினார்.
இதனை அடுத்து நிர்மலா சீதாராமன் பேச தொடங்கிய போது திமுக எம்பிக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். அப்போது திமுக எம்பிக்களை நோக்கி நிர்மலா சீதாராமன் "ஏன் ஓட்டுறீங்க.. தமிழ்நாடு குறித்து நிறைய விஷயம் நான் சொல்லணும்.. ஓடிடாதீங்க.. ஒருவேளை போன கூட டிவில போய் பாருங்க.. தமிழ்நாடு விஷயம் இன்னும் நிறைய சொல்றதுக்கு இருக்கு.. நான் சொல்றத டிவில போய் பாருங்க.." என பங்கமாக கலாய்த்தார்.
தொடர்ந்து பேசிய அவர் "தமிழ்நாடு அரசு மதுரை எய்ம்ஸ் காண நிலத்தை கையகப்படுத்துவதில் தாமதம் செய்ததால் 1200 கோடி ரூபாயில் இருந்த பட்ஜெட் தற்பொழுது 1977 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த பழியை மாநில அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர மத்திய அரசு மீது சுமத்த கூடாது. கோவிட் பெருந்தொற்றின் போது மதுரை எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தை பார்வையிட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மாநில அரசின் சிரமத்தை மத்திய அரசு உணர்கிறது ஆனால் அதன் பிறகு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது" எனது திமுக எம்பி எழுப்பிய கேள்விக்கு நிர்மலா சீதாராமன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
English Summary
Nirmala Sitharaman criticized DMK MPs who walked out from Parliament