இஸ்லாமிய நாடுகள் மீது குண்டு போட்டதே ஒபாமா தான்.!! நிர்மலா சீதாராமன் பதிலடி!! - Seithipunal
Seithipunal


இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது இந்தியாவில் இஸ்லாமியர்கள் நிலை குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நரேந்திர மோடி "இந்தியாவில் மதம், சாதி அடிப்படையில் எந்த பாகுபாடும் கிடையாது. அனைவரும் சமமாக நடத்தப்படுகின்றனர் என" பதில் அளித்திருந்தார். 

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பதிலுக்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா "பிரதமர் மோடியுடன் நான் இருந்திருந்தால் இந்தியாவில் இஸ்லாமிய நிலை குறித்து பேசி இருப்பேன்" என கருத்து தெரிவித்திருந்தார். இதனை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சி பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் "இந்தியாவில் இல்லாத பிரச்சனையை எந்தவித புள்ளி விவரங்களும் இல்லாமல் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன.

சில மாநிலங்களில் ஒரு சில இடங்களில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தேசிய பிரச்சனையாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பூதாகரமாக்குகின்றன. பிரதமர் நரேந்திர மோடிக்கு இதுவரை 13 நாடுகள் சர்வதேச விருதுகளை வழங்கியுள்ளன. அவற்றில் 6 நாடுகள் இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்டவை. 

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கூறியுள்ள கருத்து அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியா மற்ற நாடுகளுடன் நல்ல நட்புறவில் இருக்க வேண்டும் என விரும்புகிறது. அதே நேரத்தில் ஒபாமாவின் இத்தகைய கருத்துக்கு நான் பணிவுடன் பதில் அளிக்க விரும்புகிறேன். அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த காலத்தில் தான் 6 இஸ்லாமிய நாடுகள் மீது 26 ஆயிரம் குண்டுகள் வீசப்பட்டன. அவ்வாறு இருக்க ஒபாமா கூறிய குற்றச்சாட்டுகளை மக்கள் எப்படி நம்புவார்கள்'' என பதிலடி தந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nirmala Sitharaman reply to obama who bombed Islamic countries


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->