என்எல்சி நமக்கு தேவை! அந்த நிலம்., நிலம்.,! சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏ.,வின் கேள்விக்கு அமைச்சர் மழுப்பலான பதில்!  - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் இன்று என்எல்சி விவகாரத்தில் தமிழக அரசு நிலைப்பாடு என்ன? சேத்தியாதோப்பு பகுதியில் 60 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளதாக பாமக எம்எல்ஏ கேள்வி எழுப்பினார். 

இது குறித்து பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "மாண்புமிகு உறுப்பினர் அண்ணன் ஜி கே மணி அவர்கள் குறிப்பிடும் போது செய்தியாத்தோப்பு பகுதியில் 60 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

ஆனால் இது போன்ற தகவல்கள் அந்த பகுதியில் பரப்பப்படுகிற ஒரு தகவல். உண்மையில் அது போன்ற தகவலுக்கு ஒரு அடிப்படையான ஆதாரம் இல்லை. தமிழக அரசின் கவனத்தில் நிச்சயமாக அப்படி ஒன்று கிடையாது. 

அப்போது குறுக்கிட்ட பாமக எம்எல்ஏ., "ஒப்பந்தம் கோர உள்ளதாக கூறுகிறார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது" என்று தெரிவித்தார்.

அதற்கு அமைச்சர், இல்லை ஒப்பந்தம் கோருகிறார்களே தவிர, அரசாங்கம் அதற்கு உண்டான நிலங்களை கையகப்படுத்தக்கூடிய சூழல், அரசாங்கம் அதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது என்ற தகவலோ கிடையாது. எனவே இந்த நிலையில் இந்த கேள்வி பொருத்தமாக இருக்காது என்பது தான் என்னுடைய பதில்.

தேவைக்கு இல்லாமல், தேவைக்கு அதிகமானதாக அரசாங்கம் நிலம் கையகப்படுத்தாது. விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பெற்றுக் கொள்வதோ, பெற்றுக் கொள்வதற்கான முயற்சியோ எந்த காலத்திலும் தமிழக அரசு மேற்கொள்ளாது. 

தேவை இருந்தால் நிலத்தை எடுக்கிறோம். உதாரணத்துக்கு ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டம் நிலம் வாங்கியது, ஆனால் அந்த திட்டம் இல்லை என்ற போது, வரலாற்றில் நம்மளுடைய திமுக அரசாங்கம் தான் அதற்கான நிலங்களை அத்தனை விவசாயிகளுக்கும் திருப்பிக் கொடுத்தது. மேலும் கொடுக்கப்பட்ட நிவாரணத்தை கூட நாங்கள் திருப்பிப் பெறவில்லை.

எனவே விவசாயிகளின் நலனில் இந்த அரசாங்கம் அக்கறையாக உள்ளது. நெய்வேலி நிலக்கரி நிறுவனம் என்பது தமிழ்நாட்டினுடைய மின் தேவையை பெரும் அளவில் நிறைவு செய்யக்கூடிய நிறுவனமாக இருக்கக்கூடிய காரணத்தினால், நம்முடைய மின் தேவையை, நம்முடைய அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மின் தேவைக்கு அது தேவைப்படுகிறது.

இந்த நிலம்..., (எடுக்கப்பட உள்ளது.., அமைச்சர் மழுப்பலான குரலில் அதாவது உண்மையை மறைக்க) நம்மளுடைய மின் உற்பத்தி, நம்முடைய மின் தேவைகளை கருத்தில் கொண்டு, அவையில் இருக்கக்கூடிய அனைத்து கட்சி உறுப்பினர்களும் பொறுப்புணர்வுடன் அதில் அணுக வேண்டும். செயல்பட வேண்டும் என்று வேண்டுகோளாக வைத்து என் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று அமைச்சர் கடைசி வரை என்எல்சி விரிவாக்கத்திற்கு ஏற்கனவே  யாருக்கும் விளங்காத ஒரு விளக்கத்தை தெரிவித்து அமர்ந்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NLC Land issue TN Assembly PMK MLA q Minister Answer


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->